பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
11:07
டேராடூன் :உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலமான கேதார்நாத்தில், கடந்தாண்டு பேய் மழை பெய்தது. இதனால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பலியாகினர். இந்நிலையில், இந்தாண்டும் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி உள்ளிட்ட புண்ணிய தலங்களில், கடந்த சில நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது.இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு, பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ’இன்னும் சில நாட்களுக்கு பலத்த மழை தொடரும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் பக்தர்களிடையே, பீதி ஏற்பட்டுள்ளது.