விழுப்புரம்: சங்கடஹர சதுர்த்தியொட்டி விழுப்புரம் ரயிலடி ராஜவிநாயகர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி ÷ நற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு ராஜவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு ராஜவிநாயகர் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.