தில்லைக்காளியம்மன் கோவில் காணிக்கை உண்டியல் திறப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2014 12:07
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் நடந்த காணிக்கை உண்டியல் திறப்பில் 7 லட்சத்து 66 ஆயிரத்து 32 ரூபாய் காணிக்கை இ ருந்தது. இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் ஐந்து இடங்களில் பக்தர்கள் காணிக்கை உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.இந்த உண்டியல் இந்து அறநிலையத் துறை இணை கமிஷனர் ஜோதி, நிர்வாக அலுவலர் முருகன் முன்னிலையில் திறக்கப்பட்டு பணம் எண்ணும் பணி கோவில் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சிதம்பரம் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் காணிக்கை உண்டியலில் 7 லட்சத்து 66 ஆயிரத்து 32 ரூபாய் இருந்தது. மேலும் 719 கிராம் தங்க காசுகள், 1,609 கிராம் வெள்ளி பொருள்கள் இருந்தது. அதனைத் தொடர்ந்து காணிக்கை தொகை நகர கூட்டுறவு வங்கியில் செலு த்தப்பட்டது. கடந்த மார்ச் 19ம் தேதி உண்டியல் திறந்தபோது, 7 லட்சத்து 32 ஆயிரத்து 951 ரூபாய் இருந்தது. நேற்று 33,081 ரூபாய் கூடுதலாக பக்தர்கள் காணிக்கை இருந்தது.