பதிவு செய்த நாள்
17
ஜூலை
2014
12:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, மூன்று நாள் தெப்ப திருவிழா, வரும், 21ம் தேதி துவங்குகிறது. இதற்காக, தெப்பம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. வரும், 21ம் தேதி ஆடிக்கிருத்திகை விழாவும் மற்றும் அன்று இரவு முதல் நாள் தெப்பமும் நடக்கிறது. இதில், உற்சவர் பெருமான் எழுந்தருளி மூன்று முறை சரவணபொய்கையில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 22ம் தேதி இரண்டாம் நாள் தெப்பம், ஐந்து முறையும், 23ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம், ஏழு முறை உற்சவ பெருமான் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்காக தெப்பம் கட்டும் பணியில், 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.