மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும். இனி நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்:
நட்சத்திரம்: * அஸ்வதி ஈட்டி மரம் * பரணி நெல்லி மரம் * கார்த்திகை அத்திமரம் * ரோகிணி நாவல்மரம் * மிருகசீரிடம் கருங்காலி மரம் * திருவாதிரை செங்கருங்காலி மரம் * புனர்பூசம் மூங்கில் மரம் * பூசம் அரசமரம் * ஆயில்யம் புன்னை மரம் * மகம் ஆலமரம் * பூரம் பலா மரம் * உத்திரம் அலரி மரம் * அஸ்தம் அத்தி மரம் * சித்திரை வில்வ மரம் * சுவாதி மருத மரம் * விசாகம் விலா மரம் * அனுஷம் மகிழ மரம் * கேட்டை பராய் மரம் * மூலம் மராமரம் * பூராடம் வஞ்சி மரம் * உத்திராடம் பலா மரம் * திருவோணம் எருக்க மரம் * அவிட்டம் வன்னி மரம் * சதயம் கடம்பு மரம் * பூரட்டாதி தேமமரம் * உத்திரட்டாதி வேம்பு மரம் * ரேவதி இலுப்பை மரம்
ராசிகள்
* மேஷம் செஞ்சந்தனம் மரம் * ரிஷபம் அத்தி மரம் * மிதுனம் பலா மரம் * கடகம் புரசு மரம் * சிம்மம் குங்குமப்பூ மரம் * கன்னி மா மரம் * துலாம் மகிழ மரம் * விருச்சிகம் கருங்காலி மரம் * தனுசு அரச மரம் * மகரம் ஈட்டி மரம் * கும்பம் வன்னி மரம் * மீனம் புன்னை மரம்
இந்த மரங்களை, ஈரோடு அருகேயுள்ள லக்காபுரம்புதுõர் லட்சுமி நாராயணர் கோயில், சென்னை திருவொற்றியூர் வடிவுடை நாயகி அம்மன் கோயி ல், மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் வணங்கலாம்.