கவுமாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2014 12:07
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூடுதலாக குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ராட்டினம் அமைக்கும் மைதானத்தில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. குளியலறை வசதிகளுடன் கூடிய புதிய முடிக்காணிக்கை மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. தவிர ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.இந்த தொட்டிகளில் இருந்து வீரபாண்டி கோயில் பகுதிகளில் உள்ள அனைத்து கழிப்பிடங்களுக்கும் குழாய் இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதன் மூலம் 24 மணி நேரமும் வீரபாண்டியில் கழிப்பிடங்களில் தண்ணீர் வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் இடதுபுறத்தில் ராட்சத மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் பக்தர்களுக்கு அதிக வசதிகள் கிடைக்கும் என கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.