பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
01:07
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியில், பிரசித்த பெற்ற,
சோமேஸ்வர ஸ்வாமி கோவிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம், அபிஷேம், கணபதி ஹோமம், அஷ்ட லட்சுமி ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம், கோ பூஜை, அஷ்ட பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூல மந்திர யாகபூஜையும், 12 ராசி மற்றும் 27 நட்சத்திரங்களுக்கு பரிகார யாக பூஜையும் நடந்தது.காலபைரவர், 28 வகையான அபிஷேகம், சோடச உபசார பூஜை, தீபாராதனை, முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.