செஞ்சி: செஞ்சி பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவிலில் 42வது ஆண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சிவசுப்பிரமணியருக்கு பால் மற்றும் விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு காவடி அபிஷேகமும், பகல் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 3 மணிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், மார் மீது மாவு இடித்தல், மழுவேந்தல், கடப்பாறை உருவுதல், செடல் சுற்றல் மற்றும் தீமிதி விழா நடந்தது. தொடர்ந்து காவடி ஊர்வலம், வேன், டிராக்டர் ஆகியவற்றை அலகு குத்தி இழுத்து வந்தனர்.