பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
03:07
குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம், எஸ்.மோட்டூர் கிராமத்தில் உள்ள தீர்த்தமலையில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத முருகர் கோயிலில் ஆடிக் கிருத்திகைப் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.இதையொட்டி அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.தொடர்ந்து காவடி சாத்துபடியும், மதியம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி சுகுமாரன் தலைமை வகித்தார்.ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.எல்.எஸ். வனராஜ் வரவேற்றார்.குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து, கோயில் அருகில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட குளத்தை ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி சுகுமாரன் திறந்து வைத்தார் .சென்னை சரக காவல் துறை துணைத் தலைவர் சி. சந்திரசேகரன், ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளைத் தலைவர் லட்சுமணன், ஸ்ரீலஸ்ரீ குருமகாராஜ சிவானந்த வாரியார் சுவாமிகள், ஒன்றியக் குழு உறுப்பினர் கே. ரமேஷ், கருணீகசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தன் உள்ளிட்டோர் அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.கோயில் நிர்வாகிகள் ஆர். பாலாஜி நாயுடு, ஆர். ராஜாராம் நாயுடு, ஆர். வெங்கடாத்ரி நாயுடு உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.