வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2014 04:07
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமார சுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சித்தர் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.இக்கோயிலில் திங்கள்கிழமை ஆடிமாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமி கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.