நீடாமங்கலம் ஞானாம்பிகை சமேத கோகமுகேஸ்வரர் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, ஞானாம்பிகை சமேத கோகமுகேஸ்வரர், வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் அன்னதானம் செய்யப்பட்டது. இரவு 108 திருவிளக்குப் பூஜையும், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. ஏற்பாடுகளை நகரவாசிகள், பழனி முருகன் பாதயாத்திரைக் குழுவினர் செய்திருந்தனர்.இதேபோல், நீடாமங்கலம் விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயிலிலும் ஆடிக் கிருத்திகை பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை நகரத்தார் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.