வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2014 11:07
சிங்கம்புணரி : சிங்கம்புணரி வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா காப்புக்கட்டு, கொடியேற்றத்துடன் துவங்கியது. யாகசாலை பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,ஆராதனை நடந்தது. சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 29ந்தேதி ஊஞ்சல் தரிசனம்,ஆக.1ல் பக்தர்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்தல்,2 ல் திருவிளக்கு பூஜை, முளைப்பாரி எடுத்தல்,3 ல் மாவிளக்கு வழிபாடு கலை இசை நிகழ்ச்சி நடக்கிறது.