மயிலம்: தண்டு மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடந்தது.விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வழிபாடுகள் நடந்தது. காலை 7 மணிக்கு குளக்கரையிலிருந்து பக்தர்கள் பூங்கரகத்தை அலங் கரித்து முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். பிற்பகல் 2 மணிக்கு கோவில் வளாகத்தை வந்தடைந்தனர். அம்மனுக்கு மதியம் 2 மணிக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் 2.30 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா காட்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்தனர்.