திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கடந்த, 21ம் தேதி ஆடிப்பூரம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. வரும், 30ம் தேதி அம்மனுக்கு வளைகாப்பு விழா நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு, தினமும் விநாயகர், பராசக்தி அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு, ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம், அண்ணாமலையார் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில், குத்து விளக்கு பூஜை நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை, முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.