திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த செடல் திருவிழாவில் பக்தர்கள் 13 அடி நீளமுள்ள வேலை வாயில் குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை முத்துமாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு சக்தி கரக ஊர்வலமும் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு படையலிட்டனர். மாலை 4:00 மணிக்கு செடல் திருவிழா நடந்தது. அப்போது பக்தர்கள் சிலர், 13 அடி நீளமுள்ள வேலை வாயில் குத்திக்கொண்டும், முதுகில் கொக்கிப் போட்டு தேரை இழுத்தனர். இரவு 9:00 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது.