சாணார்பட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2014 12:08
சாணார்பட்டி : கம்பிளியம்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி மகாலட்சுமிஅம்மன் கோயிலில், ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.குரும்பகவுண்டர் சமுதாயத்திற்கு சொந்தமான மகாலட்சுமி கோயிலில் இரண்டு நாள் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் விநாயகருக்கு பொங்கல் வைத்து, இரவு மகாலட்சுமி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சேர்வை ஆட்டத்துடன் தேரில் பவனி வந்து கோயிலை வந்தடைந்தார். நேற்று காலை 4 மணிக்கு மகாலட்சுமி அம்மனுக்கு அபிஷேகம், தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆராதனை நடந்தது. இதனைதொடர்ந்து காலை 6 மணியளவில், வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக பக்தர்கள் தலையில் கோயில் பூசாரிகள் தேங்காய் உடைத்தனர். இன்றும் பக்தர்கள் தலையில் மீண்டும் தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியும், கருப்புச்சாமிக்கு கிடா வெட்டுதல் ஆகிய நி கழ்ச்சிகள் நடக்கின்றன. இக்கோயில் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆண்டிப் பட்டி மகாலட்சுமி கோயில் விழாக்கமிட்டியினர் செய் துள்ளனர்.