உளுந்தூர்பேட்டை: எலவனாசூர்கோட்டையில் இடத்து காளியம்மன் கோவில் விழாவையொட்டி, பலி பீட கொடுவா ஊர்வலம் நடந்தது. உளுந் தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டையில் இடத்து காளியம்மன் கோயிலில் பலி பீட கொடுவா நேர்த்தி கடன் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சி யையொட்டி நேற்று முன்தினம் மதியம் பக்தர்களின் பொங்கல் கூடை ஊர்வலமும், பலி பீட கொடுவா ஊர்வலமும் நடந்தது. இந்த ஊர்வலம் ÷ காவிலை சென்றடைந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். அப்போது தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக கொடுவாவை கோவிலில் வைத்து, பக்தர்கள் நேர்த்தி கடனை நிவர்த்தி செய்தனர்.