பதிவு செய்த நாள்
09
ஆக
2014
12:08
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் காந்திமதியம்மன் சன்னதி முன்பாக நடந்த வரலட்சுமி நோன்பு பூஜையில் 1008 பெண்கள் பங்கேற்றனர். மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந் துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும். ஸ்ரீ(செல்வம்), பூ(பூமி), சரஸ்வதி(கல்வி), ப்ரீதி(அன்பு), கீர்த்தி(புகழ்), சாந்தி(அமைதி), துஷ்டி(மகிழ்ச்சி), புஷ்டி(பலம்) ஆகிய எட்டு திகளும் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக் கப்படுகிறார்கள். அஷ்ட லட்சுமிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவரை லட்சுமிபதி என அழைப்பர். இந்த தி களையே லட்சுமியாக உருவகித்து வழிபடுகிறார் கள். இந்த திகளின் மூலமாகத்தான் கல்வி, செல்வம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து வரங்களும் பெறப்படுகின்றன. சிரவண மாதம் எனப்படும் ஆடி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர். திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் சன்னதி முன்பாக நேற்று ஆடி வெள்ளிக்கிழமை நடந்த வரலட்சுமி நோன்பு பூஜையில் 1008 பெண்கள் ஒரே நேரத்தில் பங்கேற்றனர். சிறப்பு பூஜையும் பாராயணமும் நடத்தப்பட்டன.
தொடர்புடைய கோயில்கள் :