பதிவு செய்த நாள்
09
ஆக
2014
12:08
சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிகடைசி வெள்ளி பெருந்திருவிழா, நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 10.30 மணிக்கு, கோயில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, செயல்அலுவலர் தனபாலன், ஊராட்சித்தலைவர்கள் பவுன்ராஜ் (இருக்கன்குடி), சசிகலா கண்ணன்(கே.மேட்டுப்பட்டி), கருப்பசாமி (என்.மேட்டுப்பட்டி), நத்தத்துபட்டி நாட்டாமை வேலுச்சாமி, பரம்பரை பூஜாரிகள், அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனையொட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர், கோவில்பட்டியில் இருந்து ஏராளமான மாரியம்மன் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வானங்களிலும் கோயிலுக்கு வந்திருந்தனர். அவர்கள், பொங்கலிட்டும், முடிகாணிக்கை செலுத்தியும், குழந்தைக்கு கரும்புதொட்டில் கட்டியும், அங்கபிரதட்சணம் செய்தும், நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைநடக்கின்றன. முக்கிய நிகழ்ச்சியான, ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா ஆக., 15ல் நடக்கிறது. அன்று மதியம் 1.30 மணிக்கு, மாரியம்மன் வீதியுலா வருவார். ஏராளமானோர் பங்கேற்பர்.
தொடர்புடைய கோயில்கள் :