ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ராமேஸ்வரத்தில் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2014 02:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், பாம்பன், தங்கச்சிமடம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பக்தர்கள் சிவப்பு ஆடை அணிந்து, விரதம் இருந்தனர். நேற்று, ஆதிபராசக்தி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்த, பக்தர்கள் 1008 கஞ்சி கலயத்துடன், ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதியில் ஊர்வலமாக வந்து, ஓம் சக்தி நகரில் நடந்த யாக பூஜையில் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் பாலசுப்பிரமணியன் பலர் செய்திருந்தனர்.