Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலோகநாதர் கோவிலில் விதைத் தெளி ... தும்பவனம் மாரியம்மன் 32 கரங்களுடன் வீதியுலா! தும்பவனம் மாரியம்மன் 32 கரங்களுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுவாபுரியில் திருக்கல்யாண மகோற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
11:08

கும்மிடிப்பூண்டி : சிறுவாபுரியில் நடைபெற்ற, வள்ளி மணவாள பெருமான் கல்யாண மகோற்சவத்தில் திருமண வரம் வேண்டி, ஏராளமான ஆண்கள், பெண்கள் பங்கேற்று, முருகனை வழிபட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே, சின்னம்பேடு கிராமத்தில் உள்ளது சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். திருமண தடை நீக்கும் ஸ்தலம் என்ற சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு.இக் கோவிலில், சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், நேற்று, ஐந்தாம் ஆண்டு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற்றது.அதிகாலை முதலே திருமணம் ஆகாத ஆண், பெண் தங்கள் பெற்றோர்களுடன் கோவில் முன் கூடியிருந்தனர். கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த பந்தலில், அவர்களுக்கான மாலை, விவரங்கள் நிரப்ப வேண்டிய குறிப்புகள், ஆன்மிக புத்தகங்கள் அடங்கிய பைல் மற்றும் தண்ணீர், கூல் டிரிங்கஸ் ஆகியவை குழுவினர் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. திருமண வரன் வேண்டி, திருமணம் ஆகாத ஆண், பெண் என, 1,000க்கும் மேற்பட்டோர், தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து, சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவிலின் செயல் அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையிலான அர்ச்சகர்கள், திருமண வைபவத்தை நடத்தினர். ஆரணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Default Image
Next News

தொடர்புடைய கோயில்கள் :
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar