கிருஷ்ணரின் பிறந்தநாளை கோகுலாஷ்டமி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா?கோ குலம் என்பது பசுக்களை வளர்க்கும் ஜாதியினர் வசிக்கும் பகுதி. அங்கு அஷ்டமி திதியில், கிருஷ்ணர் வந்து சேர்ந்ததால், கோகுலாஷ்டமி என்று அந்த நாள் சிறப்பு பெற்றது. கோகுலத்தின் தலைவர் நந்தகோபர். தங்கள் தலைவர் வீட்டில் கிருஷ்ணர் பிறந்ததாகக் கருதிய மக்கள், தங்கள் வீடு முழுவதும் அரிசி மாவினால் கோலமிட்டனர். பன்னீர், நறுமண திரவியங்கள் தெளிக்கப்பட்டது.பசுக்கள், கன்றுகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மஞ்சள் பூசினர். சுபஹோரையில் மங்கள வாத்தியம் முழங்கப்பட்டது.அந்தணர்கள் யாகம் வளர்த்து மந்திரங்களை ஓதினர். ஆயர்பாடிமக்கள் குழந்தை கிருஷ்ணரை வாழ்த்தி, மஞ்சள் நீர் தெளித்தனர். பால், தயிர், எண்ணெய் சேர்ந்த கலவையை யசோதையிடம் வழங்கினர்.