மகாவிஷ்ணு, தேவகியின் வயிற்றில் குழந்தையாக அவதரித்தார். ஆவணி மாதத்தில் தேய்பிறைஅஷ்டமியாக இருந்த போதிலும், கடவுளே பூமிக்கு வந்ததால், தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திரன் அன்று முழுநிலவாக வானில் பிரகாசித்தார். அந்த சமயத்தில் வான மண்டலத்தில் கிரகங்கள் அனைத்தும் பூரண சுப இடத்தில் இருந்ததாக கமானிக்யா என்னும் ஜோதிடநுõல் கூறுகிறது.நான்கு கைகளுடன், சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்திய மகாவிஷ்ணு, தேவகி, வசுதேவர் தம்பதி முன் காட்சியளித்தார். அவர்களுக்கு குழந்தையாகப் பிறக்க இருப்பதாக தகவல் சொன்னார். தான் பிறந்ததும், தன்னை ஆயர்பாடியிலுள்ள நந்தகோபர்-யசோதை தம்பதியரிடம்ஒப்படைத்து விடும்படி கூறினார். அதன்படியே, வசுதேவர் செய்து முடித்தார்.