Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் குங்குமம், விபூதி ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு! விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடல் நீரை மாசுபடுத்தாத சிலைகள்... : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உஷார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஆக
2014
01:08

விநாயகர் சிலைகளை களி மண்ணால் செய்ய வேண்டும், ரசாயன வர்ணங்களை பூசக்கூடாது என, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்தவுடன், ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள், கடலில் கரைக்கப்படுவது வழக்கம். மேலும், நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து பூஜிக்கப்படும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கடலில் சங்கமம் செய்யப்பட்டு வருகிறது. ’பிளாஸ்டர் ஆப் பாரீஸ்’ என அழைக்கப்படும் வெள்ளை சிமென்ட் கலவையால் விநாயகர் சிலைகளை செய்வது, ரசாயண பெயின்ட் பயன்படுத்துவது போன்ற காரணங்களால், கடல் நீர் மாசு அடைகிறது. குறிப்பாக, ரசாயன பெயின்ட் பயன்படுத்தப்படும் குரோமியம், துத்தநாயகம், ஈயம் போன்ற ரசாயனங்கள், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ரசாயனங்களை உட்கொண்ட சிறிய மீன்களை, பெரிய மீன்கள் சாப்பிடும்போது, ’பயோ அக்குமுலேஷன்’ என்ற அடிப்படையில், ரசாயனத்தின் பாதிப்பு ௧௦ மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீன்களை மனிதர்கள் சாப்பிடும்போது, நரம்பு பாதிப்பு உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் கலவையால் செய்யப்படும் சிலைகள் எளிதில் கரைவதில்லை. கடந்தாண்டு, சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன், புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள், கடல் நீரின் மாதிரியை எடுத்து சோதனை மேற்கொண்டனர். சோதனையில், கடல் நீரில் மாசு கலந்திருப்பது தெரியவந்தது. அதையொட்டி, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்வதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். களி மண்ணை மட்டுமே பயன்படுத்தி விநாயகர் சிலைகளை செய்ய வேண்டும், ரசாயன பெயின்ட்களுக்கு பதிலாக, எளிதில் கரையக்கூடிய, ரசாயனங்கள் இல்லாத, தண்ணீர் அடிப்படையிலான பெயின்டை பயன்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தி வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar