பதிவு செய்த நாள்
23
ஆக
2014
02:08
செஞ்சி: செஞ்சி தாலுகா நெகனூர் புதூர், அம்மச்சார் நகர் சுயம்பு வேடபாளையத்து அம்மன் கோவில் மகா குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. கடந்த 21ம் தேதி காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, முதல் கால யாக வேள்வி நடந்தது. இரவு 10.30 மணிக்கு சுயம்பு வலம்புரி விநாயகர், வேடபாளையத்து அம்மன், பாலமுருகன், துர்க்கை தட்சணாமூர்த்தி பிரதிஷ்டை, இரண்டாம் கால யாக வேள்வி நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு சுயம்பு வேடபாளையத்து அம்மன் ஹோமம், 6 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி, 9 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 10 மணிக்கு மகா குடமுழுக்கு நடந்தது. 10.30 மணிக்கு பால் குடம் ஊர்வலம், 11 மணிக்கு கூழ் வார்த்தல், 12.30 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சுயம்பு வேடபாளையத்து அம்மன் சேவா டிரஸ்ட்டினர் செய்தனர்.