பொங்கலூர் : பெருந்தொழுவு பர்வதவர்த்தினி உடனமர் பாண்டீஸ்வர சுவாமி கோவிலில், மண்டல பூஜை நிறைவு விழாவை ஒட்டி, கோமாதா பூஜை நடந்தது. விநாயகர் பூஜை, பஞ்சபூத வழிபாடு, வாஸ்து சாந்தி ஆகியவற்றை தொடர்ந்து நவக்கிரக வேள்வி, 108 பசுக்களுக்கு கோமாதா பூஜை நடந்தன. கோவை காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடந்த கோமாதா பூஜையில், பசு மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, மாலை அணிவித்து, அழைத்து வரப்பட்டிருந்தன. எம்.எல்.ஏ., பரமசிவம், ஒன்றிய தலைவர் சிவாசலம், ஊராட்சி தலைவர்கள் பழனிசாமி, அப்புசாமி பங்கேற்றனர்.