பதிவு செய்த நாள்
27
ஆக
2014
01:08
பழநி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்துமுன்னணி சார்பில் 200 க்கும் மேற்பட்ட சிலைகள் விழுப்புரத்திலிருந்து பழநிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஆக.,29 விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்துமுன்னணி சார்பில், பழநி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் வைத்து வழிபட்டு ஊர்வலம் நடத்துவதற்காக, பழநிக்கு ழுப்புரத்திலிருந்து, விநாயகர் சிலையின் பாகங்கள் தனித்தனியாக கொண்டு வரப்பட்டது. கடந்த 10 நாட்களாக இச்சிலைகளின் தலை, உடல்பகுதிகள் இணைக்கப்பட்டு, வர்ணம்பூசும்பணி நடந்தது.இந்த ஆண்டு 3 அடி முதல் 12 அடிவரையிலான சிம்மம், ஆஞ்சநேயர், நாகம், மயில், மான், மூஞ்சுரு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்துமுன்னணி மாவட்ட செயலர் ஜெகன் கூறுகையில்,""எங்கள் அமைப்பு சார்பில், 205 சிலைகள் தயார் செய்து, பழநி, ஒட்டன்சத்திரம் நகர், ஒன்றிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியன்று சிறப்புபூஜைகள் செய்கிறோம். ஒட்டன்சத்திரத்தில் ஆக., 30, பழநியில் செப்.,1 ல் ஊர்வ
லம் நடக்கிறது. தேரடி தெப்பத்தில் தண்ணீர் இல்லாததால், இவ்வாண்டு சிலைகளை சண்முகநதியில் கரைப்பதற்கு அனுமதி கோரியுள்ளோம், என்றார்.