பதிவு செய்த நாள்
30
ஆக
2014
01:08
திருப்பதி : திருமலைக்கு பாதயாத்திரை மார்க்கத்தில் வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் அளித்து வந்த, திவ்ய தரிசனத்தை ரத்து செய்வது குறித்து, ஆந்திர அரசு, ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. திருமலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், பாத யாத்திரை மார்க்கமாக வரும் பக்தர்களுக்கு, திவ்ய தரிசனம் டோக்கன் அளித்து, அவர்களுக்கு ஏழுமலையான் தரிசனம், விரைவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதன் மூலம், அவர்கள், மூன்று மணி நேரத்திற்குள், ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தற்போது, பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. சாதாரண நாட்களில், தினமும், 5,000 முதல் 10 ஆயிரம் பக்தர்கள், அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக, திரு மலைக்கு பாத யாத்திரை ஆக வருகின்றனர். முக்கிய நாட்களில், பக்தர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரம் முதல் 30 ஆயிரமாக உயர்கிறது. ஆனால், 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே, திவ்ய தரிசன டோக்கன் அளிக்கப் படுகிறது. மற்ற வர்களுக்கு, மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் தரிசனம் கிடைக்கும். இது, பஸ் மூலம் வரும், தர்ம தரிசன பக்தர்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது ஏற்படுத்திய, மூன்று அடுக்கு உயர் மேடை வசதி மூலம், ஒரு மணி நேரத்தில், 600 பேர் ஏழுமலையானை தரிசிக் கின்றனர். இதனால், பக்தர்களின் கூட்டத்தை சமாளிப் பது, தேவஸ்தானத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே, பாதயாத்திரை பக்தர்களுக்கு அளிக்கப்படும், திவ்ய தரிசன டோக்கன் திட்டத்தை ரத்து செய்யும் முடிவில், ஆந்திர மாநில அதிகாரிகள் உள்ளனர்.
தொடர்புடைய கோயில்கள் :