சங்கராபுரம்: சங்கராபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்களில் விஷேச பூஜை நடந்தது. சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சங்கராபுரம் கடைவீதி சக்தி விநாயகர் கோவில், திரவுபதியம்மன் கோவில், பொய்குனம் ரோடு, வடக்கு தெரு, சங்கராபுரம் காலனி, காட்டு வனஞ்சூர் வடக்கு தெரு, காட்டு வனஞ்சூர் காலனி, தேவ பாண்டலம், எஸ்.குளத்தூர், பூட்டை, செம்பராம்பட்டு, தியாகராஜபுரம் கிராமங்களில் நேற்று 30 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.