சென்னை: சென்னை அண்ணனூர் செல்வ விநாயகபுரம், ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் ஸ்ரீ செல்வ விநாயகரின் 25ம் ஆண்டு சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. காலையில் விநாயகருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, மாலையில் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.