பதிவு செய்த நாள்
04
செப்
2014
10:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகள் பல்வேறு அமைப்புகளின் சார்பில், 1,950 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், இதுவரை, 1,585 சிலைகள் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளது. நேற்று, கிருஷ்ணகிரி உட்கோட்டத்தில், இரு சிலைகளும், ஒசூர் உட்கோட்டத்தில், 112 சிலைகளும், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில், 8 சிலைகளும், என, மொத்தம், 122 விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது.