மதுரை ஆவணி மூலத்திருவிழா.. பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேஸ்வரர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2014 02:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் சுந்தரேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 9ம் நாளான நேற்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் கோவிலில் இருந்து பிட்டுத்தோப்புக்கு சென்றனர். அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்தது. விழாவையொட்டி சுந்தரேஸ்வரர் தங்க மண்வெட்டியை தோள் பட்டையிலும், தங்கக் கூடையை தலையிலும் சுமந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (செப்.5) விறகு விற்ற லீலை நடக்கிறது.