பதிவு செய்த நாள்
09
செப்
2014
01:09
கடம்பூர் விநாயகர், மாரியம்மன், ஓம்சக்தி, பாலசுப்ரமணியர் ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த கடம்பூர் கிராமத்தில் உள்ள விநாயர், மாரியம்மன், ஓம்சக்தி, பாலசுப்ரமணியர் ஆகிய ஆலயங்களில் கும்பாபிஷேக விழா கடந்த 7ம்தேதி காலை துவங்கியது. காலை 9 மணியளவில் முதல் கால பூஜை, மாலை 5 மணியளவில் இரண்டாம் கால பூஜை, நேற்று காலை 6 மணியளவில் மூன்றாம் காலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 10.30 மணியளவில் விநாயகர், மாரியம்மன், பாலசுப்ரமணியர், ஓம்சக்தி ஆலயங்களின் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் வைத்தியநாதன், துணைதலைவர், செயலர் உட்படபலர் செய்திருந்தனர். இரவு யானை மீது சுவாமி ஊர்வலம் நடந்தது.