பதிவு செய்த நாள்
22
செப்
2014
10:09
மைசூரு: மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்தில், தங்க அம்பாரியை சுமக்கவுள்ள அர்ஜுனா யானை, நேற்று, 350 கிலோ எடையுள்ள, மரத்தால் செய்யப்பட்ட அம்பாரியை சுமந்து, பன்னி மண்டபம் வரை சென்று பயிற்சியில் ஈடுபட்டது. மைசூரு தசரா உற்சவம் செப்., 25ம் தேதி துவங்குகிறது. அன்று காலை, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, முறைப்படி விழா துவங்குகிறது. நிறைவு நாளான, அக்., 4ல் நடக்கும் ஜம்பு சவாரியில், யானைகள் அணி வகுத்து, ஊர்வலமாக வரும். இதற்காக, யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜம்பு சவாரியில், தங்க அம்பாரியை சுமக்கவுள்ள அர்ஜுனா யானை, நேற்று, 350 கிலோ எடையுள்ள மரத்தில் செய்யப்பட்ட அம்பாரியை சுமந்து, அரண்மனை வளாகத்திலிருந்து புறப்பட்டு ஜெயசாம ராஜேந்திரா சர்க்கிள், ஆயுர்வேதிக் மருத்துவமனை சர்க்கிள், பம்பு பஜார் ரோடு வழியாக, பன்னி மண்டபத்தை அடைந்தது. அர்ஜுனாவுடன், காவேரி, மேரி, பலராமா, துர்கா பரமேஸ்வரி உட்பட, 14 யானைகள் பயிற்சியில் பங்கேற்றன.