சிதம்பரம்: தில்லைக் காளியம்மனுக்கு புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு 160வது ஆர்த்தஜாம சிறப்பு பூஜை நடந்தது. பிரசித்தி பெற்ற சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை முன்னிட்டு 160வது சிறப்பு அர்த்தஜாம பூஜை மற்றும் மகா அபிஷேக வழிப்பாடு நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதனையொட்டி விநாயகர், பிரம்சாமுண்டி சன்னதியில் நெய் தீபம் ஆராதனை சிறப்பு வழிப்பாடுகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு குடம் நல்லெண்ணை அபிஷேக தைலக்காப்பு செய்யப்பட்டு, பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களுடன் மகா அபிஷேகம் நடந்தது. தில்லைக்காளிக்கு வெண்பட்டு சாற்றப்பட்டு, வெட்டிவேர், விலாமுச்சி வேர், செவ்வரளி மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனுக்கு சிறப்பு வழிப்பாடு செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.