பதிவு செய்த நாள்
24
அக்
2014
11:10
வேலூர்: வேலூர் அடுத்த திருமலைக்கோடி ஓம்சக்தி நாராயணி பீடத்தில், தீபாவளியை முன்னிட்டு, உலக நன்மைக்காக, நேற்று முன் தினம் இரவு, 6 மணிக்கு, 10,008 தீபம் ஏற்றி சக்ர பூஜை நடந்தது.
சக்தி அம்மா பூஜையில் கலந்து கொண்டு, அருள் வழங்கி பேசுகையில், “தீபாவளி நாளில் தீபத்தை ஏற்றி வைத்து வழிபடுவது சிறந்த பலனை தரும் என்றால், 10,008 தீபத்தை ஏற்றி, அதை சக்ரமாக அமைத்து, அந்த பூஜையை பார்ப்பதும், அதில், கலந்து கொள்வதும் மிகவும் பாக்கியம்,” என்றார்.சக்ரத்தின் முன் அன்னை மங்கள நாராயணிக்கு, ஊஞ்சல் சேவை நடந்தது. சக்தி அம்மா சக்ரத்துக்கு சிறப்பு பூஜைகள், விசேஷ ஆராதனைகள் செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டு சென்றனர்.