பதிவு செய்த நாள்
25
அக்
2014
01:10
புதுச்சேரி: சாரம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது. வரும் 3ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், தினமும் மாலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிஷேகமும், 7:00 மணிக்கு, யாகசாலை பூ ஜைகளும், இரவு, சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. ஆறாம் நாள் திருவிழாவான, 29ம் தேதியன்று, மாலை 7:00 மணிக்கு வேல் வாங்கும் உற்சவமும், சூரசம்ஹார பெருவிழாவும், இரவு 9:30 மணிக்கு, மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினரும், தேவஸ்தான அர்ச்சகர்களும் செய்துள்ளனர்.