தென்கரை: சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் திருமூலநாதர் சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நடக்கிறது. நேற்று பிரதோஷ கமிட்டியினர் சார்பில் சுப்பிரமணிய சுவாமிக்கு காப்பு கட்டுதல், பாலாபிஷேகம் நடந்தது. அக்., 29ல் காலை 4.30 மணிக்கு பராசக்தியிடம் வேல் வாங்குதல், மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. பின் அன்னதானம் வழங்கப்படும். அக்., 30 ல் காலை 10 மணிக்கு அன்னப்பாவாடை தரிசனம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர், நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.