அன்னை பவதாரிணி கோவிலில் சகஸ்ரநாம அர்ச்னை துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2014 11:10
செஞ்சி: செஞ்சி அன்னை பவதாரினி நகர் சித்தாஸ்ரமத்தில் வாஞ்சா லலிதா திரிபுரசுந்தரிக்கு 36 நாள் நடக்கும் சகஸ்ரநாம கோடி அர்ச்சனை நேற்று துவங்கியது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூர் அன்னை ஓம் பவதாரிணி நகரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பகவான் யோகி ராம் சுரத்குமாரின் 96வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு வாஞ்சா லலிதா திரிபுரசுந்தரிக்கு 36 நாள் சகஸ்ரநாம கோடி அர்ச்சனை வைபவம் நேற்று காலை 6 மணிக்குத் துவங்கியது. அன்னை ஓம் பவதாரிணி சங்கல்பத்தில், ஞானஸ்கந்த சிவாச்சாரியார் கோடி அர்ச்சனையைத் துவக்கி வைத்தார். திருவாரூர் சிவாகம ரத்னம் ஈசான சிவம் நாயனார் சுந்தரமூர்த்தி, குளித்தலை ஐயர் மலை பிரணவானந்த சரஸ்வதி சுவாமிகள், திருவலம் சர்வம ங்களா பீடம் சாந்தா சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி சாரதாம்பாள் கோவில் அர்ச்சகர் கணேச சிவம் தலைமையிலான சி வாச்சாரியார்கள் கோடி அர்ச்சனையை நடத்தினர். திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் ஆசிரம தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செஞ்சி பேரூராட்சி தலைவர் மஸ்தான், தொழிலதிபர்கள் கோபிநாத், ராம்குமார், சுந்தரராஜன், காந்திமதி உட்பட பலர் கலந்து கொண்டனர். வாகன வசதி: கோடி அர்ச்சனை நடக்கும் 36 நாட்களுக்கும் செஞ்சி பஸ் நிலையத்தில் இருந்து சித்தாஸ்ரமத்திற்கு ஆட்÷ டா, வேன் வசதி செய்துள்ளனர். பக்தர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்துள்ளனர்.
யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி: 36 நாட்கள் நடக்கும் கோடி அர்ச்சனை நவம்பர் 29ம் தேதி முடிகிறது. நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதி பகவான் யோகிராம் சுரத்குமாரின் ஜெயந்தி விழா நடக்கறது. நேற்று நடந்த விழா ஏற்பாடுகளை ஓம் பவதாரிணி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார் பில் அன்னை ஓம்பவதாரிணி செய்திருந்தார்.