பதிவு செய்த நாள்
28
அக்
2014
11:10
மதுராந்தகம்: மதுராந்தகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கோவில் அருகே, சமூக விரோதிகள், தீய செயல்களில் ஈடுபட்டு வருவதால், பெண்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மதுராந்தகம் பேருந்து நிலையம் பின்புறம், நுாறாண்டுகள் பழமை வாய்ந்த, கங்கையம்மன் திருக் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா, ஆடி மாத வெள்ளி திருவிழா உள்ளிட்ட விழாக்கள் கோலாகலமாக நடைபெறும். இவ்விழா காலங்களில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர். இக்கோவில் மறைவாக அமைந்துள்ளதால், சமூக விரோதிகள், கோவிலை சுற்றியுள்ள பகுதியிலேயே அமர்ந்து மது அருந்துவது, இயற்கை உபாதை கழிப்பது பேன்ற செய ல்களில் ஈடுபடுகின்றனர். இக்கோவில் அருகிலிலேயே ஆபாச பட திரையரங்கு செயல்படுவதால், அப்பகுதியில் ஆபாச சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது, பக்தர்களிடையே அருவருப்பை ஏற்படுத்துகிறது. மேலும், கோவிலுக்கு வரும் பெண்களை, சமூக விரோதிகள் கேலி கிண்டல் செய் வது வாடிக்கையாகிவிட்டது. இதனால், பெண்கள் அச்சத்துடனே கோவிலுக்கு சென்று வருகின்றனர். எனவே, இக்கோவில் பகுதியில் சமூக வி÷ ராதிகள் நுழையாத வகையில் தடுப்பு சுவர் அமைக்க, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.