நவ.2 கல்லறைத் திருநாள் . கல்லறைத் திருநாள் என்று சொன்னாலும்அனைத்து ஆன்மாக்களின் திருநாள் என்பது தான் பொருத்தமான பெயர். ஆன்மா என்பது உடலுக்குள் உயிராக இயங்கிக் கொண்டுஇருக்கிறது. ஆனால், அது உடலை விட்டு வெளியேறிய பின்பு தான் அதனைஆராதனை செய்கிறோம். கிறிஸ்தவர்களின் புனித நுõலான பைபிளில் பலவகைப்பட்ட மரணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மூன்று முக்கியமானவை. அதில் முதலாவது உடல் ரீதியான மரணம். இது அனைவருமே அறிந்த மரணமாகும். இதனை இயேசு நித்திரை என்று குறிப்பிட்டார். யவீருவின் மகனை உயிரோடு எழுப்பும் போது அவன் நித்திரையாயிருக்கிறான் என்று சொல்லி, துõங்கும் குழந்தையை எழுப்புவது போல எழுப்பிக் கொடுத்தார். மரணமாகத் தோன்றும் சாவு கர்த்தரின் பார்வையில்நித்திரையாக இருக்கிறது.இரண்டாவது கிறிஸ்துவுக்குள் மரணம். இது பாக்கியமானதும், மகிமையானதும் ஆகும். பைபிளின் கடைசி நுõலான திருவெளிப்பாடு 14;3ல் கர்த்தருக்குள் இறப்பவர்கள் இது முதல் பாக்கியவான்கள். அவர்கள் தங்கள் வேதனைகளை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. தேவனுடைய பிள்ளைகள் கர்த்தருக்குள் இறந்துஉன்னதமான நிலையை அடைகிறார்கள். மூன்றாவது வகைநித்தியமான மரணம். உலகின் இறுதி தீர்ப்பின் போதுபாவியாயிருக்கிற மனிதன் நித்திய வேதனைக்கு நேராய் போவான். கோழைகள், நம்பிக்கை இல்லாதோர், அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், பரத்தமையில் ஈடுபடுவோர், சூனியக்காரர், பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பும், கந்தகமும் எரியும் ஏரியே அவர்களுக்குரிய இடம் ஆகும் என திருவெளிப்பாடு 21;8ல் கூறப்பட்டுள்ளது. இந்த மூன்றில் முதல்வகை இயற்கையானது. எல்லோருக்கும் பொதுவானது. இதை இரண்டாவது வகையாக அமைத்துக் கொள்ளுதல் சிறப்பானது. இவர்கள் நேராக விண்ணுலக வாழ்வுக்குள் நுழைந்து எப்போதும் இறைவனோடு இருப்பார்கள். மூன்றாவது வகையாக குறிப்பிட்ட மரணத்திற்கு நாம் உட்படாமல் தப்பிக்க முயற்சிக்க வேண்டும். பாவத்தின் கறைப்பட்ட ஆன்மாக்கள் ஈடேற்றம் அடைய உற்றார் உறவினர்களின் ஜெப உதவி தேவைப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் நித்திய வேதனையில் இருந்து தப்பிக்கின்றனர். இதையேஉயிர்த்தெழுதல் என்றுகூறுகிறோம். மரித்தவர்கள் மீண்டும் எழும்புவார்கள் என்ற நம்பிக்கையும், அதன் பின் விண்ணுலக வாழ்வில் நுழைவார்கள் என்ற உறுதியை கிறிஸ்து உயிர்ப்பின் மூலம் நமக்கு தந்திருக்கிறார். புனித பவுல், நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன். என் ஓட்டத்தை முடித்து விட்டேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதிநாளில் ஆண்டவர் எனக்குத் தருவார் என்று கூறுகிறார்.அந்த வெற்றி வாகையை அனைத்து ஆன்மாக்களும் பெற கல்லறை வழிபாடு உதவுகிறது.