பதஞ்சலி மனோகரர் கோவிலில் சிவத்தல யாத்திரைக் குழுவினர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2014 12:11
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் பாடல் பெற்ற சிவத்தல யாத்திரைக் குழுவினர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூரில் வரலாற்றுச்சிறப்பு மிக்க சிவத்தலமான தியாகராஜர் கோ வில் உள்ளது. இக்கோவிலில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் தஞ்சை சாலையில் விளமல் என்ற இடத்தில் பதஞ்சலி மானோகரர் திருக்கோ வில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும்(தினசரி) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. குறிப்பாக திருமணத்தடை, புத்திரபாக் கியம், திக்குவாய் மற்றும் நாள் பட்ட வியாதி உள்ளவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நேற்று முன்னதினம் நித்திய பிரதோஷத்தை முன்னிட்டும் இன்று அன்னாபிஷேகத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில் சேலம் மாவட்டம் ஓமலுார் வட்டம் தாரமங்கலமத்தை சேர்ந்த பாடல் பெற்ற சிவத்தல யாத்திரைக் குழுவினர்கள் அக்குழுவின் தலைவர் பெருமாள் தலைமையில், கலியாலம் சென்று வந்த 5 பெண்கள் உள்ளிட்ட எட்டுபேர் மற்றும் சிறுவர்கள் கொண்ட 25 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் சிவாச்சாரியர் சந்திரசேகரர் சுவாமிகள் அக்குழுவினர்களை வரவேற்று கோவில் சிறப்பு அர்ச்சனை செய்து கோவில் வரலாறுகளை கூறினார்.