பதிவு செய்த நாள்
10
நவ
2014
11:11
விருகம்பாக்கம் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 11 கிரவுண்ட் நிலத்தை, ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து வாடகையை மட்டுமாவது வசூலிக்க முடியுமா என, அறநிலைய துறை திண்டாடி வருகிறது. சென்னை விரு கம்பாக்கத் தில் காளியம்மன் கோவில் தெருவில், சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்÷ காவிலுக்கு சொந்தமான பெரும்பாலான கோவில்கள் பல்வேறு தரப்பினரால், ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.
தில், கோவிலை ஒட்டியுள்ள, 11 கிரவுண்ட் நிலத்தை, அப்பகுதியை சேர்ந்த, 16 பேர் தனித்தனியாக ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டி பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களை அங்கிருந்து அகற்ற அறநிலைய துறை சில ஆண்டுகளுக்கு முன் நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அறநிலைய துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆனால், இதை அப்பகுதி மக்கள் மேல் முறையீடு செய்துவிட்டு, அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
ரூ.22 கோடி: தற்போதைய நிலவரப்படி, இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில், 11 கிரவுண்ட் நிலம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இங்கு, ஒரு கிரவுண்ட், 2 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ள கோவில் நிலத் தின் மதிப்பு, 22 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, 2011ம் ஆண்டு, இங்கு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு, வாடகை நிர்ணயித்து குறைந்தபட்ச வருவாய் ஈட்ட முயற்சி மேற்கொண்டனர். அதற்காக அனைத்து ஆக்கிரமிப்பாளர்களையும் அழைத்து கூட்டம் நடத்தினர். ஆனால், அதன்பின் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திண்டாட்டம்: இதேபோன்று விருகம்பாக்கம் வெங்கடேசன் நகர் பகுதியில் இக்கோவிலுக்கு சொந்தமாக, 1.8 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விவசாயத்துக்காக பல ஆண்டு களுக்கு முன், முனுசாமி என்பவர் குத்தகை பெற்றார். அவர் இறந்துவிட்ட நிலையில், குத்தகை ஒப்பந்தம் ரத்தாகிவிட்டது. ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்நிலம் முறையாக பராமரிக்கப்படாமல், கட்டடக்கழிவுகள், குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. பல கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்தும், இக்கோவிலில் தினசரி பூஜை செலவுக்கே திண்டாடும் சூழல் நிலவுகிறது. இருக்கும் நிலங்களை முறையாக பராமரித்தாலே, அதிலிருந்து கிடைக்கும் வருவாய், கோவில் நிர்வாகத்துக்கு பேருதவியாக இருக்கும் என, பக்தர் கள் தரப்பில் கூறப்படுகிறது.
காரணம் என்ன?: இதுகுறித்து, இக்கோவிலின் செயல் அலுவலர் சுரேஷ் கூறியதாவது: கோவில் நிலத்தில் ஆக்கிரமித்து குடியிருப்போர், பல ஆண்டுகளாக குடியிருக்கும் எங்களுக்கு, இந்த இடம் வேண்டும் என, வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், வாடகை நிர்ணையம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்காமல், அவர்களிடம் வாடகை வசூலிக்க போகிறோம் என, அறநிலையத்துறை தெரிவிப்பது, பக்தர் கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.