பதிவு செய்த நாள்
11
நவ
2014
02:11
சிந்தித்து செயலாற்றும் கடக ராசி அன்பர்களே!
குரு உங்கள் ராசியில் இருந்து டிச. 3ல் 2-ம் இடமான சிம்மத்துக்கு செல்கிறார். இதனால் சிரமம் இருக்குமிடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் தீரும். தொழில் வளர்ச்சியால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் புதன் நற்பலனைக் கொடுப்பார். நவ. 22 வரை செவ்வாயும், டிச. 8 வரை சுக்கிரனும், ராகு மாதம் முழுவதும் நன்மை தருவர். எதையும் சிறப்பாக முடிக்கும் வல்லமை பெறுவீர்கள். பணப் புழக்கம் கையில் அதிகரிக்கும். மாதத் தொடக்கத்தில் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வகையில் எதிர்பார்த்த பலனை காண முடியாது. கணவன்- மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. உடல்நிலை திருப்தி அளிக்கும்.
தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உருவாகும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். நவ.21க்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பணியாளர்கள் பணியிடத்தில் மேன்மை காண்பர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். நவ. 21 க்கு பிறகு வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். சிலர் இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். டிச. 8ல் புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் பதவி உயர்வு கிடைக்கும்.
கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. டிச. 7க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
அரசியல்வாதிகள் நவ. 22க்குப் பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் கல்வி, விளையாட்டில் சிறந்த நிலையில் இருப்பர். நவ. 21 க்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகள் சிறந்த மகசூலைப் பெறுவர். எள்,கரும்பு, கீரைவகைகள், பழ வகைகள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.புதிய சொத்து நவ. 22க்குள் வாங்குவது நல்லது.
பெண்களுக்கு பெரியோர் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்வு கைகூடும்.
நல்ல நாள்: நவ. 18, 19, 25, 26, 27, 28, டிச. 3, 4, 5, 6, 7, 10, 11, 15
கவன நாள்: நவ. 29, 30 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 7, 8 நிறம்: வெள்ளை, நீலம், பச்சை
வழிபாடு: சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். செவ்வாயன்று முருகனை வழிபட்டு துவரை தானம் செய்யலாம். சுக்கிரனை வழிபடுங்கள்.