பதிவு செய்த நாள்
11
நவ
2014
02:11
தன்னம்பிக்கை மிக்க சிம்ம ராசி அன்பர்களே!
குரு டிச. 3ல் மிதுனத்தில் இருந்து உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இது சிறப்பானது அல்ல என்றாலும் குருவால் ஏற்படும் சிரமமும் எதிர் காலத்தில் நன்மையாகவே அமையும். நவ. 21 முதல் டிச.7 வரை புதன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனியால் நற்பலன் தொடரும். சுக்கிரன் டிச.7ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் நவ. 22 வரை நற்பலனை கொடுப்பார். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுப்பர். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். பெண்களால் உதவி கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக கிடைக்கும். நவ. 21 வரை போட்டியாளர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்பட வாய்ப்புண்டு.
பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நவ.22க்கு பிறகு நிறை÷ வறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை பிரிய நேரிடலாம்.
கலைஞர்கள் நற்பெயர் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நவ. 22-ந் தேதிக்கு பிறகு பின்தங்கிய நிலை நீங்கி நன்மை அடைவர். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.
விவசாயிகள் கடின உழைப்பை சிந்த வேண்டியது இருக்கும்.கால்நடை மூலம் வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். அக்கம் பக்கத்தினரின் தொல்லையில் இருந்து விடுபடுவர். பிள்ளைகளால் பெருமை அடைவர்.
நல்ல நாள்: நவ. 17, 20, 21, 27, 28, 29, 30, டிச. 5, 6, 7, 8, 9, 12, 13, 14
கவனநாள்: டிச.1,2 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 4,6 நிறம்: சிவப்பு,வெள்ளை
வழிபாடு: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். முருகன் கோயிலுக்கு செல்லுங்கள். பைரவரை வணங்கி வாருங்கள். ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.