பதிவு செய்த நாள்
21
நவ
2014
12:11
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி யம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தர். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. திருப்பணிக்குழு டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில் முக்குன்ற நாதர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், சுவாமி கோவில் உலாவும் நடந்தது. உபயதாரர் ஆனந்தகுமார், கார்த்திகா, நிர்வாக குழுவினர் பச்சைவண்ணன், செல்லக்குட்டி, பழனி, சண்முகம், நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை அர்ச்சகர் செல்வம் செய்தார். தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் பிரேதோஷ வழிபாடு நடந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார். மேலச்சேரி பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் குடைவரை கோவிலில் மத்தளேஸ்வரர், பிரகன் நாயகி, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். பூஜைகளை சிவநாதன் குருக்கள் செய்தார்.