திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் கோட்டை அறம்வளர்த்த நாயகி சமேத அன்பநாயக ஈஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாத இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 108 சங்குகள் மற்றும் கலசங்கள் வைத்து சிறப்பு யாகபூஜை நடந் தது. சுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அம்பாளுக்கு புனித கலச நீரால் அபிஷேகமும்,சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. பூஜை களை செல்லப்பா குருக்கள் தலைமையில், சபரிநாதன், கணபதி செய்தனர்.