புதுச்சேரி: பேட்டையன் சத்திரம் திரிபுரசுந்தரி உடனுறை சிவசடையப்பர் கோவிலில், வரும் 16ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சனிப்பெயர்ச்சியான 16ம் தேதி, பிற்பகல் 2:44 மணிக்கு, துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சனிபகவான் பிரவேசிப் பதை முன்னிட்டு, கோவிலில், பிற்பகல் 1:15 மணியளவில் கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், நவகிரக அபிஷேகம் நடக்கிறது. பிற்பகல் 2:44 மணிக்கு சிறப்பு கலசாபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.