நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற திருக்கோயில்களின் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். பெண்கள் இங்கு இருமுடி கட்டு ஏந்தி வந்து கடல் குளித்து தரிசனம் நடத்துவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு மூன்று முறை வலியபடுக்கை பூஜை நடைபெறும். முதல் பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள் நடைபெறும். இரண்டாவது வலியபடுக்கை பூஜை பரணிக்கொடையின் போது நடைபெறும். மூன்றாவது வலியபடுக்கை பூஜை கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும். கார்த்திகை கடைசி வெள்ளியான 12-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்த பூஜை நடைபெறுகிறது.