திருவாடானை, உத்திரகோசமங்கை கோயில்களில் சங்காபிஷேகம் !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2014 02:12
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 1008 சங்காபிஷேகம் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில் சன்னதி மணிமண்டபத்தில் நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. உற்சவரான மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி தாயார், பஞ்சமூர்த்திகளின் முன் சிவலிங்க வடிவில் உள்ள சங்குகளில் புனித நீர் நிரப்பி கோயில் ஸ்தானிகம் குருக்கள் தங்கராஜ், முத்துக்குமார், மாணிக்கம் உட்பட பல சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர். பின்னர், மூலவருக்கு கும்ப புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு ராஜ மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்பாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர் செய்திருந்தனர்.